• Jul 25 2025

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்-

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.இவரின் மறைவிற்கு  ஏராளமான அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி பாலிவூட் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு “இந்த கடினமான நேரத்தில், பிரதமருக்கு கடவுள் பொறுமையையும் அமைதியையும் வழங்கட்டும், ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.


இவரைத் தொடர்ந்து நடிகை குஷ்புவும்  பதிவிட்டுள்ளதாவது : “நமது பிரதமர், நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தாயை இழந்து தவிக்கும் வலியை வார்த்தைகளால் ஆற்ற முடியாது. ஒரு இந்தியனாகவும், ஒரு தாயாகவும், பிரதமரின் துக்கத்திலும், வலியிலும் நான் அவருடன் துணை நிற்கிறேன். அவரது இழப்புக்கு தேசமே இரங்கல் தெரிவிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.


நடிகையும், ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, பிரதமர் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது : “பிரதமர் நரேந்திர மோடியின் அன்புத் தாயார் ஹீராபென் மோடி அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.


பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட்டும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “மதிப்பிற்குரிய மோடி ஜி, உங்கள் தாய் எங்கும் செல்லவில்லை, அவர் எப்போதும் உங்களுடன் தான் இருந்தார், இனியும் உங்களுடன் தான் இருப்பார். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.


இதுதவிர தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அனுபம் கேர் ஆகியோரும் மோடியின் தாயார் மறைவுக்கு டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.















Advertisement

Advertisement