• Jul 26 2025

விஜய் டிவி அவார்டில் கண்கலங்கிய பிரபலங்கள்- அப்பிடி என்னதான் நடந்துச்சு..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தாய் செல்வம். மேலும் இவர் இயக்கத்தில் நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, மௌன ராகம் 1 உள்ளிட்ட சீரியல்களை தாய் செல்வம் இயக்கியுள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் இவர் பணியாற்றியுள்ளார். ஆம், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த 'நியூட்டானின் மூன்றாம் விதி' படத்தை இயக்கியுள்ளார். 

அத்தோடு தாய் செல்வம் இயக்கிய கடைசி சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரத்தில் தான் தாய் செல்வம் காலமானார்.

இவ்வாறுஇருக்கையில் , மறைந்த இயக்குனர் தாய் செல்வம் அவர்களை கௌரவிக்கும் விதமாக சிறந்த இயக்குனருக்கான விருதை கொடுத்துள்ளனர். இந்த விருதை அவருடைய மனைவி வாங்கியுள்ளார்.

தாய் செல்வம் இயக்கிய சீரியலின் கதாநாயகன், கதாநாயகிகள் அனைவரும் இணைந்து இந்த விருதை கொடுத்துள்ளனர். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement