• Jul 25 2025

அது பெண்களின் ஆணவம் இல்லை... நீயா நானா கோபிநாத்தின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளல் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்லி ஷோக்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் 15 வருடங்களுக்கு மேலாக ஹிட்டாக ஓடும் ஷோ தான் நீயா நானா.


விவாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் அவர்களே தொகுத்து வழங்கி வருகின்றார். இவ்வாறாக தொடர்ந்து பல வருடங்களாக, பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு  என்று ஏராளமான ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

மேலும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விவாதம் போல் பேசி அதற்கு ஒரு தீர்வு காண்பதுவும் இந்த நிகழ்ச்சியில் ஓர் முக்கியமான அம்சமாக இருக்கின்றது. இந்த நிலையில் இதில் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு எவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றது என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.


அதில் தொகுப்பாளர் கோபிநாத் இடையில் ஒரு கருத்தை உறுதியாகக் கூறி இருந்தார். அதாவது "அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு அதிகாரம் இருக்கலாம். அது திமிரு அல்ல ஆணவம் என்ற பார்வை இருக்கிறது, ஆனால் அது ஆணவம் இல்லை, அந்த அதிகாரத்தில் இருப்பவரின் குரல்" என கூறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் "அதிகாரத்தின் கரம் ஓங்கும் பொழுது, அங்கு ஆணவத்தின் குரல் எட்டி பார்ப்பது வழமை தானே" என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement