• Jul 24 2025

வெளியானது சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி - அதுவும் யார் கூட மோத போறாங்க தெரியுமா? அப்போ செம சம்பவம் இருக்கு ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு எடுத்து வந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

 சந்திரமுகி 2 படத்தை பெரிதும் லாரன்ஸ் நம்பி இருக்கிறார்.ஏனென்றால் முதல் பாகம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து வசூல் வேட்டையாடியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரண்டாம் பாக படங்களில் நடிக்க விரும்பாத காரணத்தினால் லாரன்ஸ்க்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழலில் சந்திரமுகி 2 படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி படப்பிடிப்பை நிறைவு செய்ததை ஒட்டி சந்திரமுகி 2 படக்குழு குரூப் போட்டோ எடுத்து உள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செப்டம்பர் மாதம் நிறைய படங்கள் வெளியாக உள்ள நிலையில் சந்திரமுகி 2 படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படம் வெளியாக இருக்கிறது. 

சந்திரமுகி 2 படத்திற்கு இப்படம் டஃப் கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement