• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி எப்படி இருக்கிறார் என்று பாருங்க- முதல் முதலாக வெளியிட்ட புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 72 நாட்களைக் கடந்துள்ளது. இருப்பினும் நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.


மேலும் இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்து வந்தார்.பின்னர் ரசிகர்களால் கவரப்பட்டார். இருப்பினும் அமுதவாணனுடன் இவர் காட்டிய நெருக்கம் தான் ரசிகர்களை சலிப்படையச் செய்தது.


இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தும் ஜனனி வெளியேறினார். இவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது என்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தற்பொழுது பாவாடை தாவணி அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement