• Jul 24 2025

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் யார் யார் தெரியுமா?- வெளியாகிய பட்டியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவிலேயே டாப் நடிகராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது.

மேலும் இவருக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஆகிய பிற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.இவரைத் தொடர்ந்தே தமிழில் விஜய் அஜித் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தமிழை போல மற்ற மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் தெலுங்கில் ராம் சரண், அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களும் இப்போது அதிக சம்பளம் பெற ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி எல்லா மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்.

ரஜினிகாந்த்- ரூ. 110 கோடி

கமல்ஹாசன்- ரூ. 130 கோடி

விஜய்- ரூ. 125 கோடி

அஜித்- ரூ. 105 கோடி

அல்லு அர்ஜுன்- ரூ. 100 கோடி

ராம் சரண்- ரூ. 100 கோடி

பிரபாஸ்- ரூ. 150 கோடி  

ஷாருக்கான்- ரூ. 100 கோடி

சல்மான் கான்- ரூ. 125 கோடி

அக்ஷய் குமார்- ரூ. 120 முதல் ரூ. 130 கோடி

Advertisement

Advertisement