• Jul 24 2025

சிறுவர்களுக்கு இந்த விஷயங்கள் பற்றி கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும்- சர்சையாகப் பேசிய நடிகை மிருணாள் தாகூர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நெட்பிளிக்ஸில்  வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்சீரிஸில் எந்தவொரு சிக்கலான காமக் கதையும் இல்லை என்றும் பிரபல இயக்குநர்கள் எல்லாம் படு மொக்கையான கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத டைட்டிலுக்கே சம்மந்தம் இல்லாத விஷயங்களை படமாக்கி உள்ளனர் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நெட்பிளிக்ஸ் வெளியாகும் பல தயாரிப்பாளர்கள் வெறும் குப்பைகளாக இருப்பது போல இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2வும் அமைந்து விட்டது என கடுமையான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.இன்ஸ்டாகிராமிலும் சினிமா விழாக்களுக்கும் செம ஹாட்டான கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்து வரும் மிருணாள் தாகூர் இயக்குநர் பால்கி இயக்கத்தில் வெளியான மேட் ஃபார் ஈச் அதர் கதையில் நடித்திருந்தார். 


ஆனால், அந்த கதையில் பழம்பெரும் நடிகை நீனா குப்தா தான் தனது வசனங்களாலும் நடிப்பாலும் ஓரளவுக்கு காப்பாற்றினார் என்றும் மிருணாள் தாகூர் மற்றும் நடிகர் அங்கத் பேடியின் பர்ஃபார்மன்ஸ் பெரிதாக இல்லை என ரசிகர்கள் விளாசி உள்ளனர்.

இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியை ப்ரமோட் செய்யும் விதமாக சமீபத்தில் பேட்டி அளித்த மிருணாள் தாகூர் வீட்டில் உள்ள பெரியவர்கள் தான் சிறுவர்களுக்கு காமம் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், மெச்சூரான செக்ஸ் பற்றிய விவாதங்கள் நடந்தால் தான் வெளியே இருந்து தப்பான செக்ஸ் பற்றிய விஷயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பேசி உள்ளார். 


வெறும் வியாபாரத்திற்காக உருவாக்கப்படும் இதுபோன்ற ஆந்தாலஜி என்டர்டெயின்மென்டாக கூட இல்லை இதில், கிளாஸ் வேற எடுக்க வந்துட்டாங்க என ரசிகர்கள் மிருணாள் தாகூரின் இந்த பேச்சையும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement