• Jul 24 2025

மறைந்த மகளின் பிறந்த நாள்... மனதை உருக்கும் பதிவின் மூலமாக வாழ்த்து தெரிவித்த சித்ரா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தனது மென்மையான குரலின் மூலம் பல கோடி மக்களின் மனதை கவர்ந்த பின்னணி பாடகிகளில் ஒருவரே கே.எஸ். சித்ரா.  அத்தோடு இவர் இந்தியளவில் பிரபலமான பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகின்றார். இவருக்கு சின்னக்குயில் சித்ரா என்ற செல்லப் பெயரும் உண்டு.


குறிப்பாக இவரின் குரலில் எந்தப் பாடல் வெளிவந்தாலும் அந்தப் பாடலை எளிதில் எம்மால் மறக்க முடியாது. அந்தவாக்கியில் மலர்கள் கேட்டேன், கொஞ்சி பேசிட வேணாம், மெதுவா மெதுவா, ஆனந்த குயிலின் பாட்டு, கண்ணாளனே, நான் போகிறேன், அண்ணாமல அண்ணாமல ஆகிய பாடல்கள் இன்றும் நம் மனதில் நீங்காத அளவிற்கு இடத்தை பிடித்துள்ளன.


இவ்வாறாக பல ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த சித்ரா கடந்த 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2002ஆம் ஆண்டு நந்தனா எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. 


ஆனால் எதிர்பாராத விதமாக 2011ஆம் ஆண்டு சித்ராவின் மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணமடைந்துவிட்டார். இந்த செய்தி திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் வருடாவருடம் தனது மகளின் பிறந்தநாள் அன்று சித்ரா பதிவு ஒன்றை வெளியிட்டு வருவது வழமை.

அந்த வகையில் இன்றைய தினமும் தனது மகளின் பிறந்தநாள் என்று குறிப்பிட்டு தன் செல்ல மகளின் அழகிய புகைப்படத்துடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement