• Jul 25 2025

இந்த வீட்டில் சீன் கிரியேற் பண்ணுறது இவங்க தான்... ஆணித்தரமாக கூறும் போட்டியாளர்கள்.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. ஏற்கெனவே 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அதுமட்டுமல்லாது மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது 10 வாரத்தை கடந்து பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகின்றது. மேலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஜனனி வெளியேறுவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "இந்த வீட்டில் அடிக்கடி சீன் கிரியேற் பண்ணுறது யார்" எனக் கேட்கின்றார். அதற்கு ஏடிகே தனலட்சுமியின் பெயரைக் கூறுகின்றார். அத்தோடு மைனாவும் தனலட்சுமியின் பெயரைத் தான் கூறுகின்றார்.

அடுத்ததாக விக்ரமன் அசீமின் பெயரைக் கூறுகின்றார். அதாவது அசீம் தன்னை நடுநாயகமாகப் படுத்தி பண்ணக் கூடிய வேலைகள் பலரைக் காயப்படுத்தி இருப்பதாக கூறுகின்றார் விக்ரமன். இதற்கு உடனே அசீம் பதிலளிக்கும் விதமாக "நான் எனக்காக கேட்டதை விட மற்றவங்களுக்காக போய் கேட்டு மாட்டினது தான் ஜாஸ்தி" எனக் கூறுகின்றார்.

அதற்கு கமல் "மரத்தைப் பிளந்தால் ஆப்பு வச்சிருப்பாங்க, அதை அகற்றணும் என்பது தான் உங்க ஆசை ஆனால் வால் மாட்டிக்குதே" எனக் கூறி சிரிக்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement