• Jul 24 2025

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட மோதல்- பலத்த காயங்களுக்குள்ளான போலீஸார்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இவெளியூட்டு விழாவானது நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றது.இதில் நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளனர்.இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் ரசிகர்கள் பலருக்கும் குவிந்திருந்தனர். அதன் வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இநநிலையில், நுழைவாயிலில் இருந்த சில காவல் துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் இதற்க்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் போலீஸ் மீது ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு தவறு என்று கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.மேலும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுவதைக் காணலாம்.


Advertisement

Advertisement