• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 6 பிரபலம் ரச்சிதாவின் அம்மா யார் தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2007ம் ஆண்டு கன்னட சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை ரச்சிதா. இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின்னர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம்,இதுசொல்ல மறந்த கதை என பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சரளமாக பேசக் கூடிய இவர் 2013ம் ஆண்டு தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது, 


ஆனால் தினேஷ் இந்த பிரிவு நிரந்தரமில்லாதது தான் என்று இன்டர்வியூக்களில் பேசி வருகின்றார்.மேலும் ரச்சிதா தற்பொழுது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வருகின்றார்.


அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா தனது அம்மாவை நினைத்து கதறி கதறி அழுது கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார்.அப்படி ரச்சிதா எமோஷ்னலாக பேசிய அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா,அவரின் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement