• Jul 24 2025

கிளைமேக்ஸ் காட்சியை நெருங்கிய ரோஜா சீரியல்- சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் குறிப்பாக காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இல்லத்தரசிகளின் நம்பர் ஒன் சாய்ஸ் ‘ரோஜா’ சீரியல் தான். 

கடந்த 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா நடித்து வருகின்றனர். இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.


குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் தற்போதைய தகவலின் படி, ரோஜா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம். இதையறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement