• Jul 25 2025

அசீமின் வாதத்தால் விழுந்து விழுந்து சிரித்த ஹவுஸ்மேட்ஸ்- போட்டியாளர்களை அடக்கிய ஏடிகே- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நீதிபதியாக ADK இருக்கிறார். ஒரு பக்கம், விக்ரமனுக்கான வழக்கறிஞராக ஷிவினும், அமுதவானணுக்கான வழக்கறிஞராக அசீமும் செயல்படுகிறார். விக்ரமனை அசீம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த போது வித்தியாசமான சத்தம் எழுகிறது.


 இதனால் ஜூரியாக அமர்ந்திருந்த மணிகண்டன், மைனா ஆகியோர் சிரிக்க நீதிபதியாக இருந்த ADK-வும் ஒருநிமிடம் சிரித்துவிடுகிறார். இடையே, தனலட்சுமியும் விழுந்து சிரிக்கிறார். அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட, ADK ஜூரியாக இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றார்.


மேலும், நீதிவேண்டி வழக்கு தொடுத்தவர்களின் உணர்வை நாம் மதித்து செயல்பட வேண்டும் என்றார். அப்போது, "ஈ அடிக்கடி வந்ததுனால தான்" என மைனா சொல்ல, "பரவால்ல, நம்முடைய உள்ளுணர்வின்படி நடக்க வேண்டும்" என ADK சொல்கிறார்.இந்த வீடியோ வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement