• Jul 24 2025

காமெடியனாக இருந்து மாஸ் ஹுரோவாக அவதாரம் எடுக்கும் நடிகர் சிவா- அதுவும் யாருடைய படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குநர் ராம். அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் பேசும் விஷயம், மக்கள் மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்லும்.

இதில் மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கி இருந்த ராம், அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார்.நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு "ஏழு கடல் ஏழு மலை" என்றும் பெயரிடப்பட்டுள்ளது.


யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. அடுத்தடுத்து கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருந்தது.

ஏழு கடல் ஏழு மலை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட சூழலில், இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த நிலையில், ராம் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. 


பிரபல நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படம் ஒன்றை ராம் அடுத்து இயக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. பொதுவாக, மிர்ச்சி சிவா நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் காமெடியாகவும் இருக்கும்.அப்படி ஒரு சூழலில், தற்போது ராம் போன்ற ஒரு இயக்குநருடன் சிவா இணைந்துள்ளது பற்றிய தகவல், சினிமா ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement