• Jul 25 2025

ராதிகாவையும் கழட்டி விட்டு செல்வியுடன் கோபி செய்யும் சேட்டைகள்- மோசமாக கலாய்த்து வரும் பாக்கியலட்மி சீரியல் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.


பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி நடித்து வருகின்றனர்.மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


பாக்கியலட்சுமி வீட்டு வேலைக்கார பெண் செல்வி என்ற கதாபாத்திரத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.தற்போது அவர் கோபியுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.


 பாக்யாவை விவாகரத்து செய்த கோபி, தற்போது ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கின்றார். இந்த நிலையில் இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கோபியை கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement