• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆசை நிறைவேறி விட்டது- விக்ரமனை வச்சு செய்த தனலக்ஷ்மி -ஒரு வார்த்தை Trend ஆனது குத்தமா".

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்றைய தினம் ராபர்ட் மாஸ்டர் அசல் கோலாறு ஜி.பி முத்து சாந்தி மாஸ்டர் ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் தனலக்ஷ்மி மற்றும் மணிகண்டன் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.இவர்கள் என்ட்ரி கொடுத்தது அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளது.

அனைவரும் அவர்களை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில்,ADK முதலில் பிக் பாஸ் போல மாறி போட்டியாளர்களை வழி நடத்தி இருந்தார். மேலும் அவருக்கு தோன்றும் டாஸ்க்குகளை கூட கொடுக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் பிக் பாஸ் போல கொஞ்ச நேரத்திற்கு மாறிய ஷிவின், தனலட்சுமி, சாந்தி உள்ளிட்டோரை குழந்தைகள் போல மாற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. 


இதனையடுத்து, குழந்தை போலவே பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த தனலக்ஷ்மி, குழந்தைகள் போல அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தார். அப்படி இருக்கும் நிலையில், குழந்தைகள் அழுவது போலவே அழுதபடி, "எனக்கு பூமர் வேணும், எனக்கு பூமர் வேணும். பூமர் குடுக்க சொல்லுங்க" என கூறிக் கொண்டே இருக்கிறார். இதனைக் கேட்டதும், "கலாய்க்குறா" என மைனா கூறுகிறார்.

இதன் பின்னர் பேசும் விக்ரமன், "அது எல்லாம் இங்க இல்ல. பூமர் எல்லாம் சாப்பிட்டா அப்புறம் முழுங்கிடுவீங்க" என தெரிவிக்கிறார். அப்போது பேசும் தனலக்ஷ்மி, "அப்புறம் ஏன் அங்கிள் வீட்டுல பூமர் வெச்சுருக்கீங்க" என கூறினார்.

சமீப காலமாக, பிக் பாஸ் வீட்டிற்குள் பூமர் என்பது பற்றிய கருத்து பரவலாக இருந்து வருகிறது. அசீம், விக்ரமன், அமுதவாணன் உள்ளிட்டோர் பூமர் என மாறி மாறி பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில், அதனை ஜாலியாக தனலக்ஷ்மி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement