• Jul 26 2025

மயோசின் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது எதில் ஆர்வம் காட்டி வருகின்றார் தெரியுமா?- கையில தான் வச்சிட்டு இருக்கிறாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த நோய் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சகுந்தலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் அவர் பங்கேற்ற முதல் பட நிகழ்ச்சி இதுவாகும். இதனால் இந்த விழாவில் பேசும்போதும் சற்று எமோஷனல் ஆன சமந்தா கண்ணீர்விட்டு அழுதார்.


இது ரசிகர்களை கலங்கச் செய்தது.சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாட்டிற்கும் சென்று திரும்பி இருக்கிறார் அவர்.

இந்நிலையில் தற்போது சமந்தா ஆன்மீகத்தின் மீது அதிகம் ஈடுபாடு காட்டுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமந்தா சகுந்தலம் பட நிகழ்ச்சிக்கு வரும்போது கையில் ஜெப மாலை உடன் தான் வந்தார். அதன் புகைப்படங்களும் முன்பு வைரலானது குறிப்பிடத்தக்கது.விமான நிலையம் வந்த போதும் அவர் அந்த ஜெபமாலையை கையில் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement