• Jul 25 2025

தொகுப்பாளினி ரம்யாவின் புதிய முயற்சியைக் கண்டு நெகிழ்ந்த சமந்தா-குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபல்யமானவர் தான் ரம்யா. இவர் விஜய் டிவிசன்டிவி எனப் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக கடமையாற்றியிருக்கின்றார்.

இதனை அடுத்து இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை சமந்தா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.மேலும் சமந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்று அண்மையில் தகவல் வெளியானது ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement