• Jul 23 2025

சந்திரமுகி 2 திரைப்படத்தில் பேயாக நடிக்க இருப்பது பிரபல சர்ச்சை நடிகையாம்- இவர் பேயாக நடிப்பாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சந்திரமுகி.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபு வடிவேலு நயன்தாரா ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் பிளாக்பாஸ்டர் வெற்றியும் பெற்றது.

இதனை அடுத்து தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படத்தில் ராகவா லாரன்ஸ் வடிவேலு ராதிகா, ரவி மரியா வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.ஆனால் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.


இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கங்கனா ஏற்கனவே தலைவி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement