• Jul 23 2025

உன்னால என்னை ஒன்றும் பண்ண முடியாது- திடீரென இப்படி ஒரு வீடியோவைப் பதிவிட்ட அர்னவ்- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது உடன் நடித்த நடிகர் அர்னவுடன் திவ்யா ஸ்ரீதருக்கு காதல் மலர்ந்தது.

இதையடுத்து 5 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர் திவ்யாவும் அர்னவும். கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் கர்ப்பமானதும் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், செல்லம்மா சீரியலில் நடிக்கும் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்ட திவ்யா, கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.


இதையடுத்து உடல்நிலை சரியில்லை என கூறி விசாரணைக்கு ஆஜராகமால் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த அர்னவை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து கைது செய்தனர் போலீசார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அர்னவ் கடந்த வாரம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

இதனை அடுத்து அர்னவ் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப்  பதிவிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது என்னை ஒன்றும் பண்ண முடியாது ஏன் தெரியுமா அவ்வளவு வலியோடு நிற்கிறேன் என்று ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement