• Jul 25 2025

தீபிகாவின் கவர்ச்சி உடையால் வெடித்த சர்ச்சை... ஹாருக்கான் படத்திற்கு வந்த புதுபிரச்சனை...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்தில் தான் காதலித்து வந்த நடிகர் ரன்வீர் சிங்கை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும்  படங்களில் நடித்து வரும் தீபிகா தற்போது கிளாமரில் உச்சக்கட்ட நடிப்பை காட்டி வருகின்றார். எனினும் அந்தவகையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்துள்ளார்.மேலும்  அப்படத்தின் Besharam Rang என்ற பாடல் வெளியானது.


அப்பாடலில் தீபிகா படுகோனே பிகினி ஆடையணிந்து கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட வீடியோ தீயாய் பரவியது. திருமணமான 4 வருடத்திற்கு பிறகும் இப்படியொரு கிளாமரா என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து வரும் சமயத்தில் பதான் படத்தில் புதிய பிரச்சனை வந்துள்ளது.

அதாவது தீபிகா படுகோன் காவி பிகினி ஆடையணிந்தும் ஷாருக்கான் பச்சைநிற ஆடையணிந்து கவர்ச்சியாக அணிந்தது இந்து சமயத்தை அவமானப்படுத்துவதாக சிலர் புகாரளித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


மேலும் #pathaanboycott என்ற ஹாஷ்டேக்கினை பகிர்ந்து எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

Advertisement

Advertisement