• Jul 25 2025

மூன்று தலைமுறை அனுபவமும் இருக்கும் என நம்புகின்றேன்- அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த நடிகர் உதயநிதி இன்று தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதில், "வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் உதயநிதி இறுதியாக மாமன்னன் என்னும் திரைப்படத்தில் தான் நடித்துள்ளதாகவும் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement