நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தான் 'கங்குவா'. இப்படமானது பெரும் பொருட் செலவில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், இன்னொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் குறிப்பாக 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக சூர்யா நடிப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
அத்தோடு சூர்யாவுக்கு வில்லனாக இப்படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வரும் இந்த வீடியோ ஆனது தற்போது சர்ச்சையிலும் சிக்கி இருக்கின்றது.
அதாவது இந்த கிளிம்ப்ஸ் வீடியோவின் தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிக்கான விளம்பரம் இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் மூன்று நொடிகளுக்கு ஆன்லைன் சூதாட்ட செயலிக்கான விளம்பரம் தான் அந்த வீடியோவில் காணப்படுகின்றது.
இதனையடுத்து நெட்டிசன்கள் சூர்யாவை வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டனர். அதாவது போற இடமெல்லாம் மாணவர் நலன், மக்கள் நலன் பற்றியே பேசும் சூர்யா எப்படி இளஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்திற்கு அனுமதிக்கலாம் எனக் கேட்டுத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Listen News!