• Jul 26 2025

பிரபல நடிகரைப் போல் ஹேர் ஸ்டைல் பண்ணி... பள்ளிக்குச் சென்ற மாணவர்கள்... ஆசிரியர்கள் எடுத்த அதிரடி முடிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சுதீப். இவர் கன்னடத்தில் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் இவர் பின்னணிப் பாடகர், கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர், தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.


அத்தோடு திரைப்படங்களுக்காக பல விருதுகளை வென்று குவித்த இவர், தனது அறக்கட்டளை மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவ்வாறாக ஒரு நடிகராக இருந்தாலும் இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதனால் இவருக்கு சிறியோர் முதல் பெரியோர் வரை ஏராளம் ரசிகர்கள் உள்ளனர்.


இந்த நிலையில் நடிகர் சுதீப் 'ஹெப்பிலி' என்ற கன்னட படத்தில் தனது தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமாக சிகை அலங்காரம் ஒன்றினை செய்து இருந்தார். இவரின் ஹேர் ஸ்டைலை பார்த்த கல்லூரி மற்றும் பாடசாலை மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பாடசாலைக்குச் செல்கின்றனர். 


இதனைப் பார்த்துக் கடுப்பான சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளுக்கு கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியுள்ளனர். அதாவது "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை பார்த்து பள்ளி மாணவர்களும் தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள். இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் சிகை அலரங்காரம் செய்ய வேண்டாம்'' என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்த விடயமானது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement