• Jul 24 2025

குக் வித் கோமாளி ஷெரினுக்கு திருமணம்... அதுவும் எந்த நாளில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமான ஷெரினை அவ்வளவு எளிதாக இளைஞர்கள் மறந்து விட மாட்டார்கள். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து இவர் பெரிய அளவில் திரைப்படங்களில் ஜொலிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளத்தின் மூலமாக நாளுக்கு நாள் ரசிகர்களின் பட்டாளத்தை கூட்டிக் கொண்டிருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இப்போது கலந்து கொண்டிருக்கிறார். குக்காக இவருடைய பயணம் இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவருடைய கியூட்டான எக்ஸ்பிரஷனை ரசிகர்கள் சில நேரங்களில் கலாய்த்தும், சில நேரங்களில் பாராட்டியும் வருகின்றனர். அத்தோடு கடந்த வாரத்தில் ஷெரின் உடைய கெட்டப்பில் புகழ் செய்த சேட்டையும் யாராலும் மறக்க முடியாது.


இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமாக ஷெரின் பதிலளித்திருக்கிறார். அப்போதுதான் பலரும் எதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நீங்க புகழோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கீங்க என்று கேட்க, அதற்கு நாங்க நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக சண்டை போடுவோம். மத்தபடி எங்களுக்குள் எதுவும் கிடையாது. கோவம் எல்லாம் கிடையாது என்று தெரிவிக்கிறார்.

அத்தோடு  இன்னொரு ரசிகர் ஷெரினிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்க என்னுடைய ஜாதகத்தின் படி அக்டோபரில் திருமணம் நடக்கும் என்று சொல்லி இருக்காங்க, ஆனா இன்ஸ்டா பில்டரில் அடுத்த மாதம் என்று வந்திருக்கிறது.

அதனால் நான் என்னுடைய திருமணத்தை ரொம்ப சீக்கிரமா பிளான் பண்ணலாம்னு இருக்கேன் என்று கூறியிருக்கிறார்.மேலும் இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement