• Jul 24 2025

கூல் சுரேஷ் பிச்சை எடுத்துத்தான் பிக்பாஸ் போனாரு... கழுவி ஊற்றும் பயில்வான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 7-ஆவது சீசனை தொட்டுள்ளது. அந்தவகையில் மொத்தம் 18 பேர் இந்த சீசனின் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். அதிலும் நடிகர் கூல் சுரேஷ் முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருக்கின்றார்.


முன்னர் ஒருமுறை கூல் சுரேஷ் பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் தப்பாக கூறிய வீடியோ நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி இருந்தது. இதனைப் பார்த்த சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கூல் சுரேஷைக் கழுவி ஊற்றியுள்ளார். 


அதாவது "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் மனுஷன் போவானா என அபிஷேக் ராஜா முன்பு பேசிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதைப் போலவே கூல் சுரேஷும் பிக் பாஸை கழுவி ஊற்றி ஊற்றி விட்டு இப்போ அவரே போட்டியாளராக களமிறங்கி இருப்பது வேடிக்கையான ஒன்று" எனக் கூறியுள்ளார்.


மேலும் "சமீபத்தில் தொகுப்பாளினி ஒருவரிடம் மேடையில் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில் கூல் சுரேஷுக்கு சோத்துக்கே வழியில்லாமல் போய்விட்டது என அவரே வீடியோ போட்டு பிச்சை எடுத்து இருந்தார். இப்படி பிச்சை எடுத்து தான் பிக்பாஸ் வீட்டுக்கு கூல் சுரேஷ் போட்டியாளராக வந்துள்ளார்" எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement