• Jul 25 2025

பல வருடம் காதலித்த காதலியை கரம்பிடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்.! வைரலாகும் புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல தொலைக்காட்சிகளில் போட்டிபோட்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.இவ்வாறு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது சன் டிவி. 

இவ்வாறு ஒளிபரப்பாகும்  ஒரு சில சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் அந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்.

மேலும் அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல் தான் எதிர்நீச்சல் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் அது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல இதில் தற்பொழுது குணசேகரின் ஆட்டத்தை அடக்க வேண்டுமென்பதற்காக வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து உள்ளார்கள்.அத்தோடு  மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் இரவு 9:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற வேண்டுமென சீரியல் குழுவினர்களுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் சபரி. தானாக யோசிக்காமல் அண்ணன்கள் எது சொன்னாலும் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு இருந்து வருவதால் ரசிகர்கள் பற்றியும் பெரிது கடுப்பை சம்பாதித்துள்ளார். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாதாம் இவருக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவராம் எனவே சில ஆல்பம் பாடல்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


இதன் பிறகு தற்பொழுது இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் கிருத்திகா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து பிடிவாதமாக பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பலரும் இவரின் திருமணம் பற்றி தெரியாமல் இருந்து வந்தது ஆனால் தற்பொழுது அவருடைய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement