• Jul 25 2025

கணவன் மீது பொய் வழக்குத் தொடுத்த பிரபல நடிகை... பல கோடி ரூபாயை நஷ்ட ஈடாக விதித்த நீதிமன்றம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ஜானி டெப். இவர் 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' என்ற படத்தில் 'ஜாக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், 50 வயதில் தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து 2015-இல் திருமணம் செய்து கொண்டார். 


ஆனால் இந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. அதாவது ஒன்றரை வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் ஆம்பர் ஹேர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியாக பலவாறு துன்புறுத்தியதாக தெரிவித்து இருந்தார்.இந்த விடயமானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனைத் தொடர்ந்து ஜானி டெப் படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆம்பர் ஹேர்ட்டுக்கு எதிராக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 3 ஆண்டுகள் தீவிரமாக நடந்த இந்த விசாரணையில் ஜானி டெப்புக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வந்தது. 


மேலும் ஜானி டெப் மீது அவதூறு பொய் குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ஆம்பர் ஹேர்ட் நஷ்டஈடாக ரூ.78 கோடியும், அபராதமாக ரூ.38 கோடியும், மொத்தம் ரூ.116 கோடி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தன்னால் ரூ.116 கோடி வழங்க முடியாது என்றும், ரூ.8. கோடி வழங்கி வழக்கை முடித்துக் கொள்வதாகவும் ஆம்பர் ஹேர்ட் தெரிவித்து உள்ளார். இதனை ஜானி டெப் ஏற்றுக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement