• Jul 25 2025

ரஜினியின் படத்திலிருந்து திடீரென வெளியேறிய சிபி- பிரதீப் ரங்கநாதனுடன் கூட்டணி அமைக்கவுள்ளாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினியின் 'அண்ணாத்த' படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை அடுத்து ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருவதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார்.இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. அத்தோடு இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.


மேலும் இப்படத்தைத் தவிர இவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகவுள்ள லால் சலாம் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இதை தவிர்த்து சிபி சக்ரவத்தி இயக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. 

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் முழு கதையை தயார் செய்து ரஜினியிடம் இயக்குனர் சிபி அண்மையில் கூறியுள்ளார்.ஆனால், ரஜினி எதிர்பார்த்த அளவிற்கு கதை இல்லாத காரணத்தினால் இப்படத்திலிருந்து சிபி வெளியேற வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.


இந்நிலையில், ரஜினிக்காக பிரபல சென்சேஷன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் புதிய கதைக்களம் தயார் செய்து வைத்துள்ளதாகவும், சிபி சக்ரவத்திக்கு பதிலாக இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவதற்கு பெரிதும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.எதுவாக இருப்பினும் படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement