• Jul 25 2025

இனியா சீரியல் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரைத் தொகுப்பாளராகப் பணியாற்றியதோடு வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கும் பிரபலம் தான் ரிஷி. இவர் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இந்த சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவரை ரசிகர்கள் பாராட்டி வருவதோடு இனியா சீரியலில் தனது யதார்த்தமான நடிப்பையும் வெளிக்காட்டி வருகின்றார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்த'பியூட்டி' படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


“பியூட்டி” என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலுள்ள பூந்தோட்டங்களில் மட்டுமல்லாமல் அங்குள்ள இரயில்வே நிலையம், விதம்விதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே ‘சைக்கலாஜிகல் லவ் த்ரில்’லராக, கார் – பைக் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் பரபரப்பான திரைக்கதையுடன் “பியூட்டி”யை படமாக்கியிருப்பதாகவும்  சொல்கிறார்கள்.


இந்த படத்தில் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்  கரீனா ஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இந்த படம் குறித்த டீசர், ட்ரெய்லர் வெளியீடு மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement