• Jul 24 2025

செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்-ரஜினியை வாழ்த்திய கிரிக்கெட் பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement