• Jul 24 2025

தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் - குவியும் வாழ்த்துக்கள்...! வைரல் போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.அவரின் நீண்ட நாள் காதலியான உத்தர்ஷா பவார் என்ற கிரிக்கெட் வீராங்கனையை ருத்ராஜ் கரம் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இவர்களின் திருமண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவர்களின் திருமணத்தில் CSK வீரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருத்ராஜ் தனது நிச்சயதார்த்தத்தை சென்னை மக்களுக்காக செய்ய விரும்பியுள்ளார்.அவரின் மனைவியும் கிரிக்கெட் வீரர் தான். உள்ளூர் கிரிக்கெட்டில் மாநில அணிக்கு தலைமை வகுத்தவர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ருத்துராஜ் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் அண்மையில் வைரலானது.அதில் தென்னிந்திய பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை மற்றும் புடவையில் அவர்களை நிச்சயதார்த்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

சென்னை மக்கள் மற்றும் CSK அணி எனக்கு அளித்த வாழ்க்கைக்காக மகாராஷ்டிரா முறைப்படி நடக்க வேண்டிய எங்கள் திருமண நிச்சயதார்த்தம் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்தது என்று ருத்துராஜ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

ருத்துராஜின் திருமண புகைப்படங்கள் மற்றும் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.




Advertisement

Advertisement