• Jul 25 2025

62 வயது நடிகருடன் நடனமாட ரூ. 5 கோடி கேட்டாரா..? கொந்தளித்து தமன்னா வெளியிட்ட பதிவு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. மேலும் இவரை பற்றி சமீபத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்தில் இடம்பெறவிருக்கும் ஸ்பெஷல் பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாட இருக்கிறார் என தகவல் வெளிவந்தது.

அத்தோடு , ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி சம்பளமாக வேண்டும் என்று தமன்னா கூறியதாகவும் செய்திகளில் சொல்லப்பட்டது. 

எனினும் இதை பார்த்த கோபமடைந்துள்ள நடிகை தமன்னா இதுகுறித்து கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இந்த பதிவில் "பாலகிருஷ்ணா சார் மீதும், இயக்குநர் அணில் ரவிப்புடி மீதும் எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அத்தோடு இப் படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போகிறேன் என வரும் ஆதாரமற்ற செய்திகளை பார்க்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆதாரமற்ற செய்திகளை எழுதுவதற்கு முன் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள் "என கூறி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதன்முலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement