• Jul 23 2025

தந்தை சரத்குமாருக்கு ஜோடியாக மகள் வரலக்ஷ்மியா..? கடுப்பான நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்‌ஷ்மி சரத்குமார் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திலேயே பல நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வந்தாலும், ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார்.


இந்நிலையில் பிக்பாஸ் ஆரவ் உடன் இணைந்து வரலக்‌ஷ்மி நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' திரைப்படம் ஆஹா ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. இதனால் அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றிருந்தது. அதில் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வரலக்‌ஷ்மி பயங்கர டென்ஷன் ஆகி இருக்கின்றார்.

அதாவது சரத்குமார் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வரும் நிலையில், அப்பாவுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிப்பீங்களா என பத்திரிகையாளர் கேட்ட கேள்வியால் "எங்கப்பாவுக்கு ஜோடியா நான் நடிக்கணுமா?" என கேள்வி கேட்டு டென்ஷன் ஆகி விட்டார் வரலக்‌ஷ்மி.


இதற்கு அந்த பத்திரிகையாளர் "அது இல்லைங்க மேடம் ரஜினி, விஜய்க்கு வில்லியாக நடிப்பீங்களான்னு" என்று குறித்த பத்திரிகையாளர் கேள்வியை மாற்ற, செம கடுப்பில் இருந்த நடிகை வரலக்‌ஷ்மி "ஏற்கனவே விஜய்க்கு வில்லியா சர்க்கார் படத்தில் நடிச்சிட்டேன். ரஜினி சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா பண்ணுவேன். நான் ஒரு நடிகை இந்த ரோல் பண்ண மாட்டேன். அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன்' எனக் கூறி அந்த நடிகரை வெளுத்து வாங்கி இருக்கின்றார்.

Advertisement

Advertisement