• Jul 23 2025

போட்டிருந்த ட்ரெஸ் எல்லாம் கழட்டிட்டு தான் விட்டாங்க- அஜித் படத்தில் நேர்ந்த அவமானம்- மனம் நொந்த காமெடி நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இப்போது ஏகே 62 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அஜித். வெளியூர் பயணங்கள் எல்லாம் முடித்து விட்டு பட வேலைகளில் இறங்கியிருக்கிறார் அஜித். இந்த நிலையில் அஜித்தின் படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சி ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்தார்.

நடிகர் கொட்டாச்சி இப்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரின் மகள் மூலம் மிகவும் பிரபலமாகி வருகிறார்.  நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயனுக்கு மகளாக நடித்த அந்த குழந்தை நட்சத்திரம் தான் நடிகர் கொட்டாச்சியின் மகள்.


நடிகர் கொட்டாச்சி ‘ நாள் நட்சத்திரம்’ என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது தான் பட்ட அவமானங்களை அந்த பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார்.

அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்த முகவரி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் கொட்டாச்சி. ஒரு பீஜ்ஜில் அஜித்தும் ஜோதிகாவும் மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கையில் மாஸ்டர் மகேந்திரன் மேலே கட்டியிருக்கும் பந்தை எட்டி எட்டி பிடிக்கும் படியான காட்சி. அப்போது இடையில் ஒரு சிறிய கேரக்டரை மாஸ்டர் மகேந்திரனை நீ எல்லாம் இப்படி இத பிடிப்ப என்று கிண்டலாக கேட்கும். அந்த கேரக்டர்தான் கொட்டாச்சி.


அந்த நேரத்தில் கொட்டாச்சி தான் அணிந்திருந்த ஆடைகளை எல்லாம் கழட்டி ஒரு வேனில் வைத்து விட்டு புரடக்‌ஷன் கொடுத்த பனியன் டிரௌசரை போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அதன் பிறகு அந்த வேனும் சென்று விட்டதாம். அந்த நேரத்தில் புரடக்‌ஷனில் இருந்து டிரஸை கழட்டி கொடு, இத வைத்து தான் மீதமுள்ள படப்பிடிப்பை எடுத்தாக வேண்டும் என கேட்டிருக்கின்றனர்.


ஆனால் கொட்டாச்சி என் டிரஸ் எல்லாம் அந்த வேனில் போய்விட்டது என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லையாம். கழட்டிவிட்டுதான் விட்டார்களாம்.இப்படியெல்லாம் அவமானங்களை சந்தித்து விட்டுதான் வந்திருக்கிறேன் என்று கூறினார்.


Advertisement

Advertisement