• Jul 26 2025

கண்கலங்கி நிற்கும் ஜீவா..ரொமான்ஸ் பண்ணும் காவியா...நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இந்த சீரியலில் தேவி பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிய வந்ததோடு பார்த்திபன் ரம்யா திருமணமும் நின்று விட்டது. 

அதனால் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இது ஒரு புறம் இருக்க ரம்யாவும் தேவியும் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜீவா ப்ரியாவுக்கு மோதிரம் ஒன்றை கொடுத்து தனது காதலை ஏற்க சொல்லி கண்கலங்கி நிற்கின்றார்.ஆனால் ப்ரியாவோ அதை ஏற்காமல் என்னுடைய மனசு எப்ப மாறுதோ அப்ப இந்த மோதிரத்தை வாங்கி கொள்கின்றேன் எனக் கூறிவிடுகின்றார்.


இதன் பிறகு  பார்த்தி நடுஇரவு 1 மணிக்கு காவியாவிற்கு போன் பண்ணி நைட் ரைட்டுக்கு வரும் படி கூறுகின்றார்.ஆனால் காவியாவோ தன்னுடன் அக்கா தங்கை என எல்லோரும் இருக்கின்றார்கள் என்று கூறுகிறார்கள்.ஆனால் கவியா முடியாது என கத்த பார்த்தி அழகாக சமாதனப்படுத்தி கூட்டிட்டு போக முற்படுகின்றார்.









Advertisement

Advertisement