• Sep 09 2025

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் - தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. சந்தானம் நடித்த ஒரு சில படங்களை இயக்கிய ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

இதில், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன், மாசூம் சங்கர், தீபா, பிரதீப் ராவத், விபின், பெப்சி விஜயன், தீனா, தங்கதுரை, முனீஸ் காந்த், சைதை சேது ஆகியோர் நடித்து உள்ளனர்.

தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமான இத்திரைப்படமும் சந்தானத்திற்கு கம்பேக் கொடுத்து இருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் ஆடியோ லான்சில் இது முழுக்க ழுழுக்க சந்தானத்தின் படமாக இருக்கும் என்று சொன்னது போல, இப்படம் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. சந்தானத்திற்கு கம்பேக் கொடுத்துள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திரையரங்கில் வெளிவந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துள்ளதாலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement