• Sep 09 2025

மேடையில் பேசிக் கொண்ட ரஜினிகாந்தின் மைக்கை வாங்கி ரம்யா கிருஷ்ணன் சொன்ன விஷயம்- ஆர்ப்பரித்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர்கள் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என இந்திய அளவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் பேசிய ரஜினிகாந்த் என்றுமே சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தொல்லை தான். ஹுக்கும் பாடலில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் என்கிற வார்த்தையை கூட நீக்க சொன்னதாக தெரிவித்தார்.


 அப்போது கீழே அமர்ந்து, ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிவந்து, ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் மைக்கை வாங்கி யாரும் எதிர்பாராத விதமாக 'படையப்பா' படத்தில் நீலாம்பரி ரஜினிகாந்தை பார்த்து பேசும், "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும் கூடவே பொறந்தது எங்கேயும் போகாது"! என பேசினார்.


இதையடுத்து தன்னுடைய பேச்சை தொடர்ந்த ரஜினிகாந்த், தன்னுடைய குடிப்பழக்கம் உள்ளிட்டவை குறித்து பேசி, ரசிகர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை செய்தார். எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டும் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement