• Jul 25 2025

டியர் ஃபிரண்ட் மம்மூட்டி உங்களின் தாயார் மிகுந்த திருப்தியுடன் போயிருப்பார் கவலை வேண்டாம்- இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி இதுவரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகை ஜோதிகாவுடன் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்மூட்டி. இந்நிலையில் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் நேற்று காலமானார். 93 வயதான பாத்திமா இஸ்மாயில் வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. மம்மூட்டி தாயாரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாத்திமா இஸ்மாயிலின் உடல் அவர்களின் சொந்த ஊரான செம்புவில் உள்ள மசூதியில் நேற்று நல் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் மம்மூட்டியின் தாயார் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " டியர் ஃபிரண்ட் மம்மூட்டி உங்களின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்களின் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் போயிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மறைந்த பாத்திமா இஸ்மாயிலுக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகன்தான் நடிகர் மம்மூட்டி. தனது 6 பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பாத்திமா இஸ்மாயில். நடிகர் மம்மூட்டியின் மகன்தான் நடிகர் துல்கர் சல்மான். துல்கர் சல்மான், மலையாள மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement