• Jul 24 2025

தங்கலான் படத்தை பா.ரஞ்சித் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்க காரணம் என்ன தெரியுமா?- அடடே இப்படியொரு விஷயம் இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் விக்ரம் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷில் ஈடுபட்டு வருகின்றார். இப் ப்ரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளும் கெட்டப் மற்றும் அவர் அணியும் ஆடைகள் என்பன ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது.

மேலும் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருவது நாம் அறிந்த ஒன்றே. இதில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.


சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் விக்ரம் மற்றும் பட குழுவினர் படும் உழைப்பை பார்த்திருப்போம்.இந்நிலையில் தங்கலான் படத்தை குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.


 அது என்னவென்றால் பா ரஞ்சித் ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறதாம்.இதனால் தான் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் Daniel Caltagironeஎன்பவரை நடிக்கவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 



Advertisement

Advertisement