• Jul 25 2025

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தனலட்சுமி..இதை டெலிகாஸ் பாண்ணாதீங்க என கண்ணீர் வடித்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள தனலட்சுமி ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர். இவர் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமான தனலட்சுமிக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக பங்கேற்றுள்ளார் தனலட்சுமி.

தனலட்சுமி உள்ளதை உள்ளப்படி பேசி வருகிறார். தைரியமாக தவறை சுட்டிக்காட்டும் தனலட்சுமி, டாஸ்க்குகளிலும் மிரட்டி வருகிறார். எனினும் சமீப காலமாக தனலட்சுமி அதிக கோபப்படுவதால் அதிருப்தியையும் சம்பாதித்து வருகிறார்.அத்தோடு கமல்ஹாசனே கோபத்தை குறைக்க வேண்டும் என அறிவுரை கூறியும், கோபத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளார்.

இந்நிலையில் கேமரா முன் நின்று என்னை இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் அனுப்பிடுங்க..நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்.தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்த தனலட்சுமி..கொஞ்ச நேரம் கழித்து நான் உங்களிட்ட மன்னிப்பு கேட்கிறேன் பிக்பாஸ் நீங்க என்னை வெளியில் அனுப்பிடாதீங்க.. எனக்கு கோவம் வந்தா நான் அப்பிடி சொல்லிடுறேன்.


நான் கஸ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தேன்.எனக்கு கோவம் வந்தால் என்ன பேசுறது எண்டு தெரியாமல் பேசிடுகின்றேன்.நான் சொன்னதற்காக வெளியில் அனுப்பிடாதீங்க பிக்பாஸ்.என்னை மன்னிச்சிட்டீங்க என்றால் நான் போகும் போது இந்த கேமரா என்னை பார்க்க வேண்டும் என கெஞ்சுகின்றார்.பின் கண்ணீர் வடித்த படி பிக்பாஸ் உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என  கீழே விழுந்து மன்னிப்பு கேட்கின்றார்.


இதன்பின்னர் இப்படி எல்லாம் நான் செய்தேன் என்று இதை மட்டும் டெலிகாஸ் பண்ணீடாதீங்க என கெஞ்சியபடியே கேமரா முன் பேசுகின்றார்.இவர் இவ்வாறு பேசிய வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்.



Advertisement

Advertisement