• Jul 25 2025

பொய் சொல்லி ரசிகர்களிடம் சிக்கிய தனலட்சுமி! அப்பா இல்லனு சொல்லிட்டு அவர் கூடவே ரீல்ஸ்..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் வாய் துடுக்கான போட்டியாளர் என்றால், அது தனலட்சுமி தான். யார் என்ன சொன்னாலும் சண்டையை கிளப்பி கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பிலேயே சுற்றி வருகிறார். கடந்த வாரம் கூட தொகுப்பாளர் கமல் ஹாசன், உங்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல மற்ற போட்டியாளர்கள் தயங்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிகிறதா? என்கிற கேள்வி எழுப்பி, யார் எது சொன்னாலும், அதை எப்படி நீங்கள் சொல்லலாம், அதெல்லாம் நீங்க சொல்ல கூடாது என வம்பிழுப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறீர்கள் என வச்சு செய்தார்.

அத்தோடு கமல் கேட்ட பின்னராவது  தனலட்சுமி திருந்துவார் என பார்த்தல், இன்றைய தினம் சந்திரமுகி ரேஞ்சுக்கு இறங்கி மணிகண்டனிடம் சண்டை போட்டுள்ளார்.அத்தோடு இவரை பற்றி இவருடைய நண்பர்கள் கூறியுள்ள தகவல் தான் பிக்பாஸ் ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தன்னை ஒரு ஏழ்மையான வீட்டு பெண்ணாக காட்டி கொண்ட தனலட்சுமி நிஜத்தில் வசதிபடைத்த பெண் என்றும், அவருடைய அப்பா கூட இல்லை என்று சொன்னதெல்லாம் சுத்த பொய் என சொல்லி வருகின்றனர்.

தனலட்சுமியின் தந்தை ஒர்க் ஷாப் வைத்துள்ளார் என்றும், அவருடைய அம்மா துணி கடை நடத்தி வருவதோடு பைனான்ஸ் செய்து வருவதாகவும் கூறிவ. அவருடைய தந்தையுடன் தனலட்சுமி ரீலீஸ் செய்து வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என தனலட்சுமியின் நண்பர்கள் கூறியதை தொடர்ந்து, அவர் தந்தையுடன் வீடியோ போட்ட ரீலிஸ் சிக்கியுள்ளது.

மேலும்  ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு தனலட்சுமி மக்களின் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக பெற்ற தந்தையையே மறைத்தது, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என நெட்டிசன்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.அத்தோடு  பிக்பாஸ் தனலட்சுமி இரண்டு படங்களை அவரே தயாரித்தும் நடித்துள்ளாராம். ஆனால் அந்த படங்கள் இது வரை வெளியாகவில்லை. காலில் போடும் செருப்பு கூட 12000 திற்கு தான் வாங்குவார் என்றால் அவருடைய வசதி எந்த அளவில் இருக்கும் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement