• Jul 26 2025

எதையாவது பேசணும் என்று பேசாதீங்க... அசீமை அட்வைஸ் என்ற பேரில் வம்பிற்கு இழுக்கும் தனலட்சுமி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில்  5ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர். 

நேற்றைய தினம் ஷெரினா வீட்டிலிருந்து கண்ணீருடன் விடை பெற்றுச் சென்றார். அதனைத் தொடர்ந்து இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அந்தவகையில் இன்றைய தினம் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களுக்கும் அறிவுரைகள் கொடுக்குமாறு சக போட்டியாளர்களிடம் கூறப்படுகின்றது. 


அதில் தனலட்சுமி விக்ரமனுக்கு அறிவுரை கூறுகின்றார். அதாவது "ஒரு விஷயத்தைப் பேசணும் என்றால் அதைப் புரிஞ்சுக்கிட்டு பேசணும்" என்கிறார். அடுத்து ராமைப் பார்த்து "உன்னைய ஜெயிலில் வைக்கிறாங்க என்று கவலைப்படாதே" என்கிறார்.

அடுத்து சிவினைப் பார்த்து "முதல் இருந்த போல ஆக்டிவான சிவினாக இல்லை" எனக் கூறுகின்றார். மேலும் அசீமைப் பார்த்து "பேசணும் என்று பேசாமல் இரண்டு பக்க நியாயத்தையும் கேட்டிட்டு பேசுங்க" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறாக இன்றைய ப்ரோமோ ஆனது சக போட்டியாளருக்கு அறிவுரை கூறும் வகையில் மாஸாக வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement