• Jul 25 2025

நடிகர் கமல்ஹாசனை இவ்வளவு சிறுவனாக பார்த்திருக்கின்றீர்களா- நண்பனின் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் அழகான போஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும் இவர் அடுத்ததாக துணிவு பட இயகக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் குறித்த சில அப்டேட்டுக்கள் இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.


அந்த வகையில் தற்போது தனது சிறு வயதில் நண்பனின் தோளோடு தோள் நின்று கமல் ஹாசன் 1960ஆம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.பல கோடி மக்கள் பார்த்திராத இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் இவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement