• Jul 25 2025

இரவுப் பார்ட்டியில் சிம்புவுடன் இணைந்து.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ் மற்றும் விஜய்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு. இவர்கள் 3பேருக்குமே தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 


அதுமட்டுமல்லாது இவர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழமை. இதில் சிம்பு அதிகளவில் காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்றார். அதேபோன்று சமீபகாலமாக தனுஷ், விஜய்யும் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் தான் இருக்கின்றார்கள்.


இவ்வாறு முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் இவர்கள் மூவரையும் நாம் எப்போதாவது ஒருமுறை தான் நாம் ஒன்றாக இணைந்திருப்பதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஒரு முறை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இரவு பார்ட்டி ஒன்றில் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு மூவரும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கின்றனர்.


அந்தப் பார்ட்டியில் இவர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர். அந்த சமயத்தில் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் பிரபல நடிகை ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த அரிய புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் தற்போது படு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement