• Jul 24 2025

வாணி ஜெயராம் இறந்தது பற்றி எனக்கு யாருமே சொல்லல- கலங்கிய மூத்த பாடகி பி.சுசீலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவில் உள்ள பல மொழி ரசிகர்களை கவர்ந்த பாடகியாக இருந்தவர் வாணி ஜெயராம். தனது காந்தக் குரலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஆரம்பித்த அவரின் பயணம் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தொடர்ந்தது. மூன்று முறை தேசிய விருதுகளையும் பல மாநில மொழி விருதுகளையும் பெற்று சாதனையாளராக இருந்து வந்தார். 

78 வயதாகும் அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்த வந்தார். இந்நிலையில் வீட்டில் நடந்து சென்ற போது கால் தவறி விழுந்து மரணமடைந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் திரையுலகப் பிரபலங்களை மட்டுமல்லாது ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கடிக்கச் செய்துள்ளது.


மேலும் நேற்றைய தினம் இவருடைய உடல் தகனம் செய்யப்பட்டதோடு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்போர் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக வலைத்தங்களின் ஊடாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


இந்த நிலையில் மூத்த பாடகியான பி.சுசீலா ஓர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் நான் வாணி ஜெயராமுடன் இணைந்து 100 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கின்றேன்.எப்போதும் ரொம்ப அமைதியாக இருப்பார். ரொம்ப நல்லவர். அவங்களை சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். வாணி ஜெயராம் இறந்தது பற்றி எனக்கு யாரும் தெரில ஹைதராபாத்திலிருந்து என்னுடைய பேர்த்தி தான் போன் பண்ணி சொன்னா வாணி ஜெயராம் இறந்து விட்டார் என்று கூறினார்.


அது எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கு என்னால நம்ப முடில இதை எப்படி சொல்லுறது என்று தெரில.டைம் ஆச்சு என்று நினைக்கிறேன். அவங்க ஹஸ்பன்டை மீட் பண்ணியிருப்பாங்க என்று நினைக்கிறேன் என்றும் சோகமாகக் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement