• Jul 25 2025

மிகப் பிரபலமான இந்திய நடிகர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த தனுஷ்- ரசிகர்களிமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். 

இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். 


இரண்டாம் இடத்தை ஆலியா பட்டும், மூன்றாவது இடத்தை ஐஷ்வர்யா ராயும் பெற்றுள்ளனர். மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு: 1. தனுஷ் 2. ஆலியா பட் 3. ஐஷ்வர்யா ராய் பச்சன் 4. ராம் சரண் தேஜா 5. சமந்தா 6. ஹிருத்திக் ரோஷன் 7. கியாரா அத்வானி 8. ஜூனியர் என்.டி.ஆர் 9. அல்லு அர்ஜுன் 10. யாஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement