• Jul 24 2025

தனுஷ் பட நடிகை மேகா ஆகாஷ்-க்கு விரைவில் டும் டும் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் மேகா ஆகாஷ். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை என்றாலும், நடிகை மேகா மட்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் க்ரஷ் நடிகையாக மாறினார்.

சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த மேகா ஆகாஷ் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த அரசியல்வாதி தற்போது பிரபல கட்சி ஒன்றின் எம்பி ஆக இருப்பதாகவும் இந்த திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

மேகா ஆகாஷ் இருக்கும் அரசியல்வாதியின் மகனை மணக்க இருப்பது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement