• Jul 25 2025

தனுஷ் பிறந்த நாளில் ரசிகர்கள் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்- இது நல்ல திட்டமாக இருக்கே- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், நடிகராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராகவும் விளங்கி வருகிறார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்த வகையில் தமிழில் தனுஷ் இயக்கிய முதல் திரைப்படம் பா. பாண்டி. ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.


பா.பாண்டி படத்துக்கு பின்னர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார் தனுஷ். அதில் அதிதி ராவ், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ், தற்போது மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

அதன்படி தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள 50-வது படத்தை அவரே இயக்க உள்ளார். தற்காலிகமாக டி50 என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இது தவிர அருண் மாதேஷ் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளை ஜுலை மாதம் 28ம் தேதி கொண்டாடவுள்ளார்.இதனால் சென்னை சாலிகிராமத்தில் ஜுலை 28 வரை ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement