• Jul 24 2025

நடிகை அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அஞ்சலி. இதனைத் தொடர்ந்து இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அங்காடித் தெரு திரைப்படம் தான். இதனை அடுத்து இவரக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.

இதனால் தனது ரோலுக்கு தகுந்த முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களாக அஞ்சலி தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் பல காணப்படுகின்றன.


தற்போது அஞ்சலி ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஹைதராபாத்தில் ஒரு வீடு மற்றும் சென்னையில் ஒரு வீடு வாங்கி வைத்து இருக்கிறாராம்.


மேலும் அவரிடம் இரண்டு சொகுசு கார்களும் இருக்கிறது. அஞ்சலியிடம் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சலிக்கு ஷாப்பிங் செய்வது அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்காக அதிகம் செலவு செய்வதும் குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு பிரபல ஹீரோ உடன் காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரேக்கப் செய்துவிட்டார். தன்னுடைய வருங்கால கணவர் மரியாதை செலுத்தக் கூடியவராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement